நாகையில் கடல் சீற்றம், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

நாகையில் நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

Update: 2019-11-26 22:15 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இந்ந நிலையில் நேற்று காலை கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் நாகை பகுதியை சேர்ந்த மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறை முகத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1,000-த்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை கடுவையாற்றுக்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களும் கரை திரும்ப வேண்டும் என மீனவ பஞ்சாயத்தார் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வேகமாக கரை திரும்பி வருகின்றனர். நாகையை பொறுத்தவரை நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது.

மேலும் செய்திகள்