வேகமாக நிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி

மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

Update: 2019-12-03 22:30 GMT
மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிக பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி உள்ளது. இந்த ஏரி 23.3 அடி உயரம் கொண்டது. 694 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியும். இதன் பாசன பரப்பளவு 2 ஆயிரத்து 853 ஏக்கர். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஆகும்.

மதுராந்தகம் ஏரியை தூர்வாரக்கோரி கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பல முறை முதல்-அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பினர். இருப்பினும் தூர் வாரப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பருவ மழை பெய்ததன் காரணமாக மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று மதுராந்தகம் ஏரி 20 அடியை எட்டியுள்ளது. உபரி நீர் வெளியேறும் பகுதியில் கசிவு ஏற்பட்டு ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது.

இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்