நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் டன் உரம் இருப்பு வைப்பு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டது.

Update: 2019-12-15 22:00 GMT
நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பி இருப்பதால் விவசாய பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஒருசில இடங்களில் தற்போது நெல் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் நெல் நாற்று நடவு முடிவடைந்து விட்டது.

இந்த பயிர்களுக்கு தற்போது டி.ஏ.பி. மற்றும் யூரியா உள்ளிட்ட உரங்களை விவசாயிகள் போட்டு வருகின்றனர். இதற்கு தேவையான உரங்களை கூட்டுறவுத்துறை சார்பில் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அங்கிருந்து ரெயில் மூலம் நெல்லைக்கு நேற்று 42 பெட்டிகளில் 3 ஆயிரம் டன் உரமூட்டைகள் கொண்டு வரப்பட்டன. அதில் யூரியா, டி.ஏ.பி. உள்ளிட்ட உரவகைகள் இருந்தன. அந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் ரெயில் இருந்து லாரிகளில் ஏற்றினர். பின்னர் உர மூட்டைகள் பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்