உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனநாயக முறையில் நேர்மையாக நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2020-01-01 23:00 GMT
திருவாரூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமையில் நாகை செல்வராசு எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, உலகநாதன், மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி ஆகியோர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஆனந்திடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலை எந்தவித பிரச்சினை இன்றி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்து இருந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதனையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையில் எந்தவித பிரச்சினை இன்றி நடைபெறுவதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை

ஜனநாயக முறையில் நேர்மையாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டிட வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெயரை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்