உஞ்சலூர் அருகே காரணம்பாளையம் தடுப்பணையில் காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் கதி என்ன? - தேடும் பணி தீவிரம்

உஞ்சலூர் அருேக உள்ள காரணம்பாளையம் தடுப்பணை காவிரி ஆற்றில் கல்லூரி மாணவர் மூழ்கினார். அவரை ேதடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2020-01-05 22:45 GMT
உஞ்சலூர், 

ஈரோடு மாவட்டம் அறச்சலூரை சேர்ந்தவர் சண்முகம். இவருைடய மகன் கார்த்திகேயன் (வயது 22). இவர் ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 3-ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் காத்திகேயன் காலை 10.30 மணிக்கு நண்பர்கள் 3 பேருடன் ஊஞ்சலூரை அடுத்து உள்ள காரணம்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றிருந்தார். அங்கு அவர்கள் அனைவரும் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார்கள். இதில் கார்த்திகேயன் மட்டும் எதிர்பாரதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். அப்போது அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயகுரல் எழுப்பினார். உடனே அருகில் குளித்து கொண்டு இருந்த அவரின் நண்பர்கள் மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயன்றார்கள். ஆனால் அவர்களால் கார்த்திகேயனை காப்பாற்ற முடியவில்லை. தண்ணீரில் மூழ்கிவிட்டார்.

இது பற்றி உடனடியாக கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி மீனர்வர்கள் உதவியுடன் கார்த்திகேயனை தீவிரமாக தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதற்கிடையே இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) 2-வது நாளாக அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தீயணைப்புதுறையினர் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கிய சம்பவம் அவரின் உறவினர்கிளிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்