மராட்டியத்தில் 6 மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி; காங்கிரசுக்கு 2-வது இடம்

நாக்பூர், அகோலா, வாசிம், துலே, நந்தூர்பர், பால்கர் ஆகிய 6 மாவட்ட பஞ்சாயத்துகளில் உள்ள 332 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

Update: 2020-01-08 23:57 GMT
மும்பை, 

பாரதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதன்படி 103 வார்டுகளை அக்கட்சி கைப்பற்றியது. காங்கிரஸ் 73 வார்டுகளிலும், தேசியவாத காங்கிரஸ் 46 இடங்களிலும், சிவசேனா 49 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதேபோல மேற்கண்ட 6 மாவட்ட பஞ்சாயத்துக்கு உட்பட்ட 664 பஞ்சாயத்து சமிதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் பாரதீய ஜனதா 194 இடங்களை வென்றது. காங்கிரஸ் 145, தேசியவாத காங்கிரஸ் 80, சிவசேனா 117 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்