சிதம்பரத்தில் உள்ள தியேட்டர்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

சிதம்பரத்தில் உள்ள தியேட்டர்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திடீரென ஆய்வு செய்தனர்.

Update: 2020-01-20 23:00 GMT
சிதம்பரம்,

சிதம்பரத்தில் உள்ள சினிமா 2 தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாக சிதம்பரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் சென்றது. அதன்பேரில், சிதம்பரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சிதம்பரம் அன்பழகன், பெண்ணாடம் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் அந்த தியேட்டர்களில் திடீரென ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களில் எங்கு தயாரிக்கப்படுகிறது, காலாவதியாகும் நாள் ஆகியன எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்தது. மேலும் பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்களும் தரமான முறையில் இல்லாமல் இருப்பதை அவர்கள் கண்டு பிடித்தனர். மேலும் பிரட் மற்றும் பப்ஸ் போன்ற உணவு பொருட்கள் கெட்டுப்போனதாக இருந்தது.

எச்சரிக்கை

இதையடுத்து அவைகள் அனைத்தையும் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அங்கிருந்த தியேட்டர் நிர்வாகத்தினரிடம், தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்