தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பங்கேற்றனர்.

Update: 2020-01-23 22:45 GMT
தஞ்சாவூர்,

31-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தஞ்சை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள போலீஸ் மைதானத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவரும், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனும் மோட்டார்சைக்கிளில் தலைக்கவசம் அணிந்தபடி ஊர்வலமாக சென்றனர். அவர்களை தொடர்ந்து போலீசார் மற்றும் இருசக்கர வாகன பராமரிப்பாளர்கள் தலைக்கவசம் அணிந்தபடி வாகனங்களில் சென்றனர்.

துணை ஆணையர்

ஊர்வலம் பெரியகோவில், சோழன்சிலை, ராசாமிராசுதார் சாலை, அண்ணாசிலை, ஆற்றுப்பாலம், ரெயிலடி, மேரீஸ்கார்னர், திருச்சி சாலை, ராமநாதன் ரவுண்டானா, மேம்பாலம் வழியாக மீண்டும் தொடங்கிய இடத்தை அடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் உதயகுமார், வட்டார போக்குவரத்து அதிகாரி கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிச்சந்திரன், முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் செங்குட்டுவன், சுப்பிரமணியன், ரெங்கசாமி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்

அதேபோல் கும்பகோணம் வட்டார போக்குவரத்துக்கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான ஓவியம், கட்டுரை போட்டி நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஸ்ரீபன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் பரிசுகளை வழங்கினார். இதில் கும்பகோணம் பகுதியில் உள்ள 9-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்