தாராபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு மாரத்தான்

தாராபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2020-01-25 22:24 GMT
தாராபுரம்.

தாராபுரத்தில் தேசிய வாக்காளர் தினம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இளம் வாக்காளர்கள் திருவிழாவையொட்டி, வருவாய்துறை சார்பில், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரம் எனவும், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, 5 கிலோ மீட்டர் தூரம் எனவும் 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியை சப்-கலெக்டர் பவன்குமார் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம், தாசில்தார் ரவிச்சந்திரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக 5 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்கள், அரசு மேல் நிலைப்பள்ளியிலிருந்து புறப்பட்டு பைவ்கார்னர், அமராவதி ஆற்றுப்பாலம் வழியாக நகராட்சி மேல் நிலைப்பள்ளி வளாகத்தை அடைந்தனர்.

மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதலிடம் தீபக், 2-ம் இடம் சிவராஜ், 3-ம் இடம் கவியரசு, மூத்தோர் பெண்கள் பிரிவில் முதலிடம் டாக்டர் கு.சந்தனமாரி, 2-ம் இடம் கவிதா, 3-ம் இடம் சந்தியா பிடித்தனர்.

அதேபோல் இளையோர் ஆண்கள் பிரிவில் முதலிடம் கே.வசந்தகுமார், 2-ம் இடம் விஜய், 3-ம் இடம் வி.ராஜசேகர், இளையோர் பெண்கள் பிரிவில் முதலிடம் மீரா, 2-ம் இடம் மாயாமுத்துகிருஷ்ணன், 3-ம் இடம் எஸ்.இனியா. மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்ச்சியின் இறுதியில், சப்-கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

அதையடுத்து மாலையில் தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது, இதில் விரலில் மை வைத்தது போன்ற தோற்றத்தின் நடுவே ஸ்ட்ராங்கர் டெமாக்ரசி என்கிற ஆங்கில எழுத்து வடிவத்தில் 800 மாணவ-மாணவிகள் பங்குபெற்ற நிகழ்வு நடத்தப்பட்டது. இதை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்