ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்

விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

Update: 2020-02-09 23:00 GMT
பென்னாகரம்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவியில் குளித்தும், பரிசலில் நண்பர்கள், குடும்பத்துடன் சென்றும் மகிழ்வார்கள்.இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் களைகட்டியது.

பரிசல் சவாரி

மேலும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு, மெயின் அருவி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். அவர்களில் சிலர் பாதுகாப்பு உடை அணிந்து உற்சாகமாக பரிசல் சவாரி செய்து காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்