காஞ்சீபுரம், மனுநீதி நாள் முகாம்

காஞ்சீபுரம் அய்யங்கார்குளம் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அய்யங்கார்குளம் கிராமத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

Update: 2020-02-13 22:30 GMT
காஞ்சீபுரம்,

முகாமில் வருவாய்த்துறையின் சார்பாக 62 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உபகரணங்களும், வருவாய்த்துறையின் மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 31 பயனாளிகளுக்கு உதவித்தொகைகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களும், வேளாண்மைத் துறையின் சார்பாக 3 பயனாளிகளுக்கு வேளாண்மை உபகரணங்களும் வழங்கப்பட்டது.

மேலும் தோட்டக்கலைத் துறையின் சார்பாக 2 பயனாளிகளுக்கு இடுபொருள் மற்றும் செடிகள், பொது சுகாதாரத் துறையின் சார்பாக 4 பயனாளிகளுக்கு அம்மா பெட்டகம் உள்ளிட்ட மொத்தம் 115 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 15 ஆயிரத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

முகாமில் மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சுந்தர், காஞ்சீபுரம் எம்.பி.செல்வம், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்