கடலாடி அருகே, அரசு கொள்முதல் நிலையத்தில் 45 நெல் மூடைகள் திருட்டு

கடலாடி அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் 45 நெல் மூடைகள் திருட்டு போயின.

Update: 2020-02-19 22:00 GMT
சாயல்குடி,

கடலாடி அருகே மேலச்செல்வனூர் கிராமத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு கிலோ நெல் ரூ.19.50-க்கு விவசாயி களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.இதற்கான தொகை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல் மூடைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலாடி அருகே பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த புஷ்பவள்ளி என்ற விவசாயி 300-நெல் மூடைகளை விற்பனை செய்வதற்காக மேலச்செல்வனூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தின் முன்பாக அடுக்கி வைத்து பாதுகாப்பாக மூடி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இதில் 45 நெல் மூடைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து கடலாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்