நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.

Update: 2020-02-22 22:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.

பரவலாக மழை 

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.

நேற்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, அம்பை, கல்லிடைக்குறிச்சி, திசையன்விளை, ராதாபுரம், சேரன்மாதேவி சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அணை நீர்மட்டம் 

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1,204 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 96.55 அடியாக இருந்தது. அணைக்கு 265 கன அடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 93.47 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 97.45 அடியாகவும் உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:–

சேர்வலாறு –2, கொடுமுடியாறு–20, அம்பை –3, சேரன்மாதேவி –1, பாளையங்கோட்டை –3.20, ராதாபுரம் –13, நெல்லை –3.

மேலும் செய்திகள்