தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி கொலையா? பரபரப்பு தகவல்கள்

பொம்மிடி அருகே ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் விவசாயி எனஅடையாளம் ெதரிந்தது. கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் காலை செய்யப்பட்டாரா? என பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-02-23 22:33 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ஜாலியூரில் ரெயில் தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அந்த பிணத்தை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? என்பது குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள உலகனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனி (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.

பெண் கைது

ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பழனியின் மனைவி ராதாவுக்கும், அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஆறுமுகமும், ராதாவும் தோட்டத்தில் தனிமையில் இருந்தபோது வேட்டைக்கு சென்ற அதேபகுதியை சேர்ந்த சண்முகம், சின்னசாமி ஆகியோர் காட்டுப்பன்றி என கருதி துப்பாக்கியால் சுட்டத்தில் ஆறுமுகம் இறந்தது தெரியவந்தது. இதனால் ராதா மற்றும் சண்முகம், சின்னசாமி ஆகிய 3 பேரும், ஆறுமுகத்தின் உடலை அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் வீசி சென்றனர்.

இதுதொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் சண்முகம், சின்னசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். ஆறுமுகம் சுட்டுக்கொல்லப்பட்ட இந்த வழக்கு தர்மபுரி ரெயில்வே போலீசாரிடம் இருந்து மாரண்டஅள்ளி போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனிடையே தலைமறைவாக இருந்த ராதாவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

தீவிர விசாரணை

இதனிடையே கைது செய்யப்பட்ட சண்முகம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தான் நேற்று முன்தினம் பொம்மிடி அருகே ஜாலியூர் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பழனியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி பழனி கொலை செய்யப்பட்டு, கை, கால்களை துண்டித்து ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்டாரா?, அல்லது பலிக்கு பலியாக அவர் செய்யப்பட்டாரா?. அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்