ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ஈரோட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2020-02-24 23:54 GMT
ஈரோடு,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதன் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமுக்கு பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்து ரத்ததானம் செய்தார். மேலும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்களும் ரத்தம் கொடுத்தனர். பின்னர் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில், அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

மேலும் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, ஜெகதீஷ், இளைஞர் -இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்திவி, இணைச்செயலாளர் நந்தகோபால், ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி இணைச்செயலாளர் ஜெயராமன், மீன்ராஜா, கைத்தறி பிரிவு செயலாளர் கே.எஸ்.நல்லசாமி, அறங்காவல் குழு தலைவர் ஜெகதீசன், எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் சின்னு என்கிற சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் நேற்று ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமை தாங்கி, ஜெயலலிதா உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட பொருளாளர் தரணி சண்முகம், மகளிர் அணி இணைச்செயலாளர் அமுதா, ஜெயலலிதா தொழிற்சங்கம் செயலாளர் மகேந்திர குமார், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் முகமதுராஜா, பாசறை செயலாளர் பெரியார்நகர் கண்ணன், சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் ஒயிட்சாதிக், ஒன்றிய செயலாளர் பூபாலமுருகன், பகுதி செயலாளர்கள் அய்யாசாமி, அறிவழகன், நேரு உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை வீரப்பன்சத்திரம் பகுதி துணைச்செயலாளர் சக்திவேல் செய்திருந்தார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ஈரோடு பஸ் நிலையம் பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஜெயலலிதா உருவப்படம் வைக்கப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழாவில் மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர் பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் மயில்துரையன், பொருளாளர் ராமு, தொழிற்சங்க செயலாளர் குமார், மாநகர செயலாளர் குணசேகரன் மற்றும் பொறுப்பாளர்கள் துரைசாமி, வேலுச்சாமி, மாதேஷ்வரன், ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்