உலக திறனாய்வு கண்டறியும் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி

உலக திறனாய்வு கண்டறியும் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி.

Update: 2020-02-25 23:00 GMT
திருச்சி,

சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை இளம் வயதிலேயே தேர்வு செய்யும் பொருட்டு உலக திறனாய்வு கண்டறியும் திட்டம் என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகள போட்டிகள் தமிழகம் முழுவதும் கல்வி மாவட்டங்கள் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் திருச்சி கல்வி மாவட்ட அளவில் உள்ள மாணவர்கள் பங்கேற்ற தடகள போட்டிகள் நடந்தன. இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகள் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதே போல் நேற்று லால்குடி, முசிறி, மணப்பாறை கல்வி மாவட்ட அளவிலும் தடகள போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும் செய்திகள்