போக்குவரத்து கழக கூட்டமைப்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் போக்குவரத்து கழக கூட்டமைப்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-02-28 22:00 GMT
திருப்பத்தூர், 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூட்டமைப்பு தொழிற்சங்கம் சார்பில், திருப்பத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிற்சங்க தலைவர் எம்.தர்மன் தலைமை தாங்கினார். செயலாளர் அன்புநிதி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட சங்க துணைத்தலைவர் டி.ஞானசேகரன் தொடங்கி வைத்தார். 

ஆர்ப்பாட்டத்தில், தர்மபுரி மண்டலம் சார்பில் 16-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும், போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும், செலவுக்கும் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும், பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், 240 நாட்கள் பணிபுரிந்த அனைவருக்கும் உடனடியாக பணி நிரவல் செய்ய வேண்டும், 2004-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பஸ்களின் எண்ணிக்கையை குறைத்து பணி வழங்க மறுக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் கே.தண்டபாணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்