நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் மனித உரிமைகள் ஆணைய தலைவர் ஆலோசனை

மனித உரிமைகள் ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2020-02-28 23:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மனித உரிமைகள் ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பேசுகையில், ‘‘மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படும் அனைத்து மனுக்கள் மீதும் உரிய காலத்துக்குள் விசாரணை முடித்து, ஆவணங்களுடன் அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்’’ என்றார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே, நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் தீபக் டாமோர், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சரவணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்