குமரி மாவட்டத்தில் அன்பழகன் உருவ படத்துக்கு மாலை அணிவித்து தி.மு.க.வினர் அஞ்சலி

குமரி மாவட்டத்தில் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்துக்கு மாலை அணிவித்து தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2020-03-07 23:00 GMT
நாகர்கோவில்,

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார். இதையடுத்து குமரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் அன்பழகன் உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அன்பழகன் உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அன்பழகன் உருவ படத்துக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், நிர்வாகிகள் ஷேக்தாவூது, சிவராஜ், வக்கீல் உதயகுமார், எம்.ஜே.ராஜன், அழகம்மாள்தாஸ், பெஞ்சமின், சாகுல் ஹமீது, ஜெரால்டு, அசோகன், பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

இதேபோல் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் அமைந்து உள்ள அண்ணா சிலை முன்பு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. சார்பில் அன்பழகன் உருவ படம் மலர்களால் அலங்கரித்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அவரது உருவ படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, அகஸ்தீஸ்வரம் யூனியன் கவுன்சிலர் பிரேமலதா, பேரூர் செயலாளர்கள் குமரி ஸ்டீபன், இளங்கோ, மாடசாமி, மாவட்ட பிரதிநிதி எம்.எச்.நிசார், நாஞ்சில் மைக்கேல், ரூபின், சாய்ராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குழித்துறை நகர தி.மு.க. சார்பில் மார்த்தாண்டம் பஸ்நிலையம் முன்பு அன்பழகன் உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பொன்.ஆசை தம்பி தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி செர்லி நெல்சன், முன்னாள் கவுன்சிலர் அருள்ராஜ், நகர அவைதலைவர் மாகின் உள்பட பலர் கலந்து கொண்டு படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்