கோவை மாநகரில் வன்முறை : முன்எச்சரிக்கையாக 127 பேர் கைது - போலீஸ் கமிஷனர் சுமித்சரண் பேட்டி

கோவை மாநகரில் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முன்எச்சரிக்கையாக 127 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கூறினார்.

Update: 2020-03-12 22:00 GMT
கோவை,

கோவை மாநகரில் கடந்த 4-ந் தேதி முதல் இரு தரப்பினர் ஒருவரை யொருவர் தாக்கியும் அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியும் வந்தனர். எனவே சட்டம்-ஒழுங்கு பற்றி ஆலோசனை நடத்த போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நேற்றுமுன்தினம் விமானம் மூலம் கோவை வந்தார்.

அவர் கோவையில் முகாமிட்டுள்ள கூடுதல் டி.ஜி.பி.க்கள் ஜெயந்த் முரளி, சங்கர் ஜூவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அன்று இரவே சென்னை திரும்பினார். இதையடுத்து கூடுதல் டி.ஜி.பி.க்கள் 2 பேரும் கோவை மாநகர போலீஸ் அதிகாரிகளு டன் நேற்றுக்காலை ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவையில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற வன்முறை சம்பவங்க ளுக்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. கோவையில் சில அமைப்புகளின் பிரமுகர்கள் தாக்கப் பட்ட 3 வழக்குகளில் ஒரு வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற 2 வழக்குகளில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கில் 2 குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு விட்டனர். இது தவிர வாகனங்களை சேதப்படுத்தியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகரில் தற்போது இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகரில் ஆங்காங்கே வாகன சோதனைகள் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரோந்து வாகனங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாநகர் 4 உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கோட்டத்திலும் துணை கமிஷனர் தலைமை யில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதியிலும் ஒரு உதவி கமிஷனர் மேற்பார்வையில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவையில் முன்பு போல அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை ஆத்துப்பாலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்தி வந்த தொடர் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்