குடவாசல் அருகே காரில் கடத்திய ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது

குடவாசல் அருகே காரில் கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.

Update: 2020-03-17 23:30 GMT
குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் போலீசார் வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர். இதில் பெட்டி பெட்டியாக வெளிமாநில மதுபாட்டில்கள் இருந்தது.

இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள முசிறியை சேர்ந்த தேசியபாரத் (வயது35) என்பதும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பட்டுக்கோட்டை பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்வதற்காக காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை காரில் கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

இதுகுறித்து குடவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேசியபாரத்தை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்