குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: கிரு‌‌ஷ்ணகிரியில் முஸ்லிம்கள் சிறை நிரப்பும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரு‌‌ஷ்ணகிரியில் முஸ்லிம்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-18 23:30 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சிராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சலாமத், நியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் இலியாஸ் கண்டனவுரையாற்றினார்.

கண்டன கோ‌‌ஷங்கள்

இந்த போராட்டத்தின் போது ஏராளமான முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு தேசிய கொடியை கையில் ஏந்தியபடி மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மற்றும் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்