ஓசூரில் கொரோனா வைரஸ் தடுப்பு உதவி மையம் கலெக்டர் பிரபாகர் திறந்து வைத்தார்

ஓசூரில் கொரோனா வைரஸ் தடுப்பு உதவி மையத்தை கலெக்டர் பிரபாகர் திறந்து வைத்தார்.

Update: 2020-03-23 22:30 GMT
ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீதாராம் மேடு பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் எஸ்.பிரபாகர் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் 8 படுக்கையுடன் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஓசூர்-கிரு‌‌ஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே சீதாராம் மேடு பகுதியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையம், கொரோனா தடுப்பு மற்றும் உதவி மையமாக தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், பரிசோதனை செய்து சிகிச்சை பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனை

மேலும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி மற்றும் 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார். இந்நிகழ்ச்சியில், ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள், சுகாதார பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சீதாராம் மேடு சுகாதார நிலையம், தற்போது கொரோனா தடுப்பு மற்றும் உதவி மையமாக மாற்றப்பட்டுள்ளதால், அங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள், ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லலாம் என்றும், கொரோனா தொடர்பான தகவல்களை தெரிவிக்கவும், ஆலோசனை பெறவும் 9487349744, 9487345744 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பூபதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்