ஊரடங்கு உத்தரவை மீறி கண்மாயில் கூட்டமாக மீன் பிடிக்கும் கிராமத்தினர்; விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரவை மீறி கண்மாயில் கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக மீன் பிடித்து வருகின்றனர். எனவே கிராம மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-03-26 23:00 GMT
சிவகாசி, 

கொரானா நோய் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நரிக்குடி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி அங்குள்ள கண்மாயில் கூட்டம் கூட்டமாக மீன் பிடித்துச் செல்கின்றனர். கொரோனா நோய் குறித்து கிராம மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லையே என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கிராமங்கள் தோறும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக சிவகாசி பகுதியில் சில மளிகை கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை திறந்து இருந்தன. இதனால் கடைகளில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி பொதுமக்களிடம் தங்களின் வீடுகளுக்கு ெசல்ல அறிவுறுத்தினார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 2-வது நாளான நேற்றும் சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அந்த பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. 

சிவகாசி நகராட்சி சார்பில் பல இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நகராட்சி சார்பில் வாகனங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. மேலும் ஆதரவற்றவர்களுக்கு நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவின் பேரில் உணவு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்