வாகனத்தில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்

கமுதியில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாகனத்தில் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2020-03-27 21:45 GMT
கமுதி, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கமுதி யூனியன் எருமைகுளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. 

இதனை தவிர்க்க எருமைகுளம் ஊராட்சி தலைவர் பெரியசாமி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாகனத்தில் கொண்டு வந்து அவர்கள் இருக்கும் இடத்திலேயே வினியோகம் செய்யப்பட்டது. மேலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு, கட்டங்கள் வரையப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்