4 ஆயிரத்து 653 முகாம்களில் 4½ லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல்

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 653 முகாம்களில் 4½ லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Update: 2020-04-07 00:00 GMT
மும்பை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மராட்டியத்தில் லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சிக்கினர். குறிப்பாக மும்பை, தானே, புனே போன்ற நகரங்களில் பெருமளவில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், வேலையில்லாமலும் தவித்து வருகின்றனர். இவர்களுக்காக மாநில அரசு மாநில முழுவதும் முகாம்களை அமைத்து உணவு, தங்கும் இட வசதியை செய்து கொடுத்து உள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மராட்டிய அரசு 4 ஆயிரத்து 653 மீட்பு முகாம்களை அமைத்து உள்ளது. இதில் 4 லட்சத்து 54 ஆயிரத்து 142 வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவா்களுடன் சோ்த்து மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 25 தொழிலாளர்கள், வீடு இல்லாதவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்