தொழிற்சாலைகள் இயங்குவதற்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

தொழிற்சாலைகள் இயங்குவதற்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வினய் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-05-02 23:45 GMT
மதுரை, 

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் 17-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசால் விலக்கு அளிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வணிக தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கிட, வணிகம் புரிந்திட அனுமதி அளிக்கப்பட உள்ளது. அதன்படி வாகன அனுமதி மற்றும் பணியாளர்கள் பயண அனுமதி பெறுவதற்கு www.tne-pass.tne-ga.org என்ற இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கீழ் செயல்படும் இ-சேவை மையத்தின் வாயிலாக எந்தவித கட்டணமுமின்றி பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது செல்போன் இணைய தள இணைப்பின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். எனவே, இனி கலெக்டர் அலுவலகத்திற்கு விண்ணப்பதாரர்கள் எவரும் நேரில் வர வேண்டாம். தற்போது ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி, வாகன அனுமதி மற்றும் பணியாளர்கள் பயண அனுமதி ஆகியவை மறு உத்தரவு வரும் வரை செல்லும். புதிதாக அனுமதி கோருபவர்கள் மட்டும் www.tne-pass.tne-ga.org என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்