சமூக விலகலை கடைபிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருச்சி மாநகரில் சமூக விலகலை கடைபிடிக்காத கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-05-06 02:50 GMT
திருச்சி, 

திருச்சி மாநகரில் சமூக விலகலை கடைபிடிக்காத கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்கு தளர்வுகள்

திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையான முழு ஊரடங்கில் இருந்து சில அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் முக கவசம் மற்றும் 1 மீட்டர் சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தி சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு காலத்தில் தெருக்களில் சாலையோரங்களில் குப்பை குவியல்கள் இல்லாமல் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வணிக நிறுவனங்களில் இருந்து உற்பத்தியாகும் திடக்கழிவு குப்பைகளை ஆங்காங்கே தெருக்களிலோ, சாலையோரங்களிலோ கொட்டக் கூடாது. மாநகராட்சி வாகனத்தில் வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம்பிரித்து வழங்கவேண்டும்.

பூட்டி ‘சீல்’ வைப்பு

தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிதல், சமூக விலகலை கடைபிடித்தல், தன்சுத்தம் பேணுதல் மற்றும் குப்பைகளை தெருக்களில் வீசாமல் இருத்தல் ஆகியவற்றை கண்காணிப்பது கடை உரிமையாளரின் கடமையாகும். இவற்றை கடைபிடிக்காத கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பதுடன் கடை உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இந்த தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவ சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்