ரூ.5 ஆயிரம் நிவாரணம் கேட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம்

ரூ.5 ஆயிரம் நிவாரணம் கேட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடந்தது.

Update: 2020-05-08 00:42 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில், ரூ.5 ஆயிரம் நிவாரணம் கேட்டு அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது.

இதற்கு மாநில துணை தலைவரும், மாவட்ட தலைவருமான திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் குமார் உள்பட 41 பேர் கலந்து கொண்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் தொகை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

காவேரிப்பட்டணம்

இதேபோல், காவேரிப்பட்டணம் ஒன்றியம் அரசம்பட்டியில் மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் 30 பேரும், ஊத்தங்கரை தாலுகா மிட்டப்பள்ளியில் வட்ட செயலாளர் தங்கபாலு தலைமையில் 30 பேரும், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகா சார்பில் நாட்ராம்பள்ளியில் வட்ட செயலாளர் சீனிவாசன தலைமையில் 80 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்