கோவில்பட்டி பகுதியில் 1,176 தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

கோவில்பட்டி பகுதியில் 1,176 தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

Update: 2020-05-09 22:45 GMT
கோவில்பட்டி,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பாதிக்கப்பட்ட ஏழை தொழிலாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்.

கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை, கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பூக்கட்டும் தொழிலாளர்கள், பந்தல் அமைக்கும் தொழிலாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், கூடை பின்னும் தொழிலாளர்கள், வாகன பழுது நீக்கும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கடம்பூர் பஸ் நிறுத்தம் அருகில் நடந்த நிகழ்ச்சியில் 85 தொழிலாளர்களுக்கும், கயத்தாறு தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் 160 தொழிலாளர்களுக்கும், கழுகுமலை பஸ் நிறுத்தம் அருகில் நடந்த நிகழ்ச்சியில் 181 தொழிலாளர்களுக்கும், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் 750 தொழிலாளர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். மொத்தம் 1,176 தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் முக கவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., தாசில்தார்கள் மணிகண்டன், பாஸ்கரன், நகரசபை ஆணையாளர் ராஜாராம், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், கோவில்பட்டி யூனியன் துணை தலைவர் பழனிசாமி,

அ.தி.மு.க. நகர செயலாளர்கள் விஜய பாண்டியன், கப்பல் ராமசாமி, வாசமுத்து, கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் ஜோதிபாசு, மாடசாமி என்ற மாதவன், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்