தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல்; 12,365 வழக்குகள் பதிவு

தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல் தொடர்பாக 12 ஆயிரத்து 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Update: 2020-05-15 03:18 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். ஊரடங்கை மீறி தேவையின்றி வாகனங்களில் சென்ற 70 பேரை போலீசார் கைது செய்தனர். 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வழக்கு

இதேபோல் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கடைகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக திறந்து வைத்திருந்தது தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை மொத்தம் 12,365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 12,551 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 5,512 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்