கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்ற எதிர்ப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் பொதுமக்கள் போராட்டம்

சித்தையன்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-17 07:15 GMT
செம்பட்டி,

ஆத்தூர் தாலுகா செம்பட்டி அருகே சித்தையன்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்ற இருப்பதாக தகவல் பரவியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் தாசில்தார் அரவிந்த் மற்றும் செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்