ஊரடங்கு தளர்வு: தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது

ஊரடங்கு தளர்வு காரணமாக தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் நேற்று மீண்டும் செயல்பட தொடங்கியது.

Update: 2020-05-20 23:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி மார்க்கெட்டுகளில் இருந்த கடைகளை தற்காலிக மார்க்கெட்டுகள் அமைத்து இடமாற்றம் செய்யப்பட்டன. இதனால் கூட்ட நெரிசல் தடுக்கப்பட்டு வந்தது.

தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் சுமார் 400 கடைகள் உள்ளன. இந்த பகுதியில் தற்காலிகமாக மார்க்கெட்டுக்கு வெளியில் அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அனைத்தும் மீண்டும் மார்க்கெட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 150 கடைகளை சுழற்சி முறையில் திறப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வெளிப்பகுதியில் கடைகளை அமைக்கும்படி அறிவுறுத்தினர். பொதுமக்கள் நேற்று அங்கு வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர்.

இதேபோன்று மீன்மார்க்கெட்டில் மீன்கடைகளும் மீண்டும் செயல்பட தொடங்கின. இதனால் தூத்துக்குடியில் முழுமையாக இயல்பு நிலை திரும்பி இருந்தது.

மேலும் செய்திகள்