தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வக்கீல்களுக்கு நிவாரணத்தொகை மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வக்கீல்களுக்கு நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி வக்கீல்களுக்கு வழங்கினார்.

Update: 2020-05-20 22:30 GMT
திருப்பூர், 

கொரோனா வைரசின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வருகிற 31-ந்தேதி வரை 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கோர்ட்டுகளும் இயங்காமல் இருப்பதால், வக்கீல்கள் பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட வக்கீல்களுக்கு நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று லட்சுமி நகரில் உள்ள கோர்ட்டில் நடந்தது.

நீதிபதி வழங்கினார்

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் திருப்பூர் மற்றும் பல்லடத்தை சேர்ந்த 95 வக்கீல்களுக்கு நிவாரணத்தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.4 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி வழங்கினார். இதுபோல் திருப்பூர் பார் அசோசியேஷன் சார்பில் 26 வக்கீல்களுக்கும், திருப்பூர் அட்வகேட் அசோசியேஷன் சார்பில் 10 வக்கீல்களுக்கும் ரூ.4 ஆயிரம் நிவாரணத்தொகையும் வழங்கப்பட்டது. மொத்தம் 131 வக்கீல்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி நாகராஜன், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் துணைத்தலைவர் அருணாச்சலம், திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர் பழனிச்சாமி, செயலாளர் பத்மநாபன், பொருளாளர் சண்முகம், திருப்பூர் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் சச்சீதானந்தகுமார், மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பக்தபிரகலாதன் மற்றும் மூத்த வக்கீல்கள் பாலகுமார், விவேகானந்தன், அரசு வக்கீல் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்