ரூ.1 கோடியே 35 லட்சத்தில் வேளாண் கருவிகள் - கலெக்டர் வழங்கினார்

ரூ.1 கோடியே 35 லட்சத்தில் வேளாண் கருவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் ஜான் லூயிஸ் வழங்கினார்.

Update: 2020-05-21 23:45 GMT
செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் 2017-18-ம் ஆண்டு முதல் வேளாண்மை துறையின் மூலம் கூட்டுப்பண்ணை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நல்லாத்தூர், அம்மணம்பாக்கம், நல்லூர், நத்தம் போன்ற கிராமங்களில் 100 சிறு, குறு விவசாயிகளை கொண்ட உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட 27 குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 35 லட்சத்தில் நடவு எந்திரம், களை பறிக்கும் எந்திரம், உழவு எந்திரம் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது.

இந்த கருவிகளை மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுகுமார், வேளாண்மை துணை இயக்குனர் ரேவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்