ரேஷன் கடைகளில் அரிசி பதுக்கலா? உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ‘திடீர்’ சோதனை

ரேஷன் கடைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ‘திடீர்’ சோதனை சோதனை நடத்தினர்.

Update: 2020-05-21 23:00 GMT
வேலூர்,

கொரோனா தொற்று நிவாரணமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய அனைத்து பொருட்களும் விலையில்லாமல் வழங்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்து இருந்தார். அதன்படி வேலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 536 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 20 கிலோ வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் பொருட்கள் குறைவாக வழங்கப்படுவதாகவும், சில பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும் புகார்கள் வந்தன. அதன்பேரில் வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்தமிழ்செல்வன், தேவராஜ் மற்றும் போலீசார் வேலூர் மாநகராட்சி பகுதியில் திடீரென சோதனை நடத்தினர். தொரப்பாடி, சித்தூர் பஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் குறிப்பிட்ட அளவு வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர். மேலும் அங்குள்ள ஆவணங்களில் உள்ளபடி பொருட்கள் உள்ளதா என்றும் சோதனை செய்தனர்.

மேலும் செய்திகள்