மராட்டியத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கான கொரோனா சிகிச்சை கட்டணம் அரசு நிர்ணயம் செய்தது

மராட்டியத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கான கொரோனா சிகிச்சை கட்டணத்தை மாநில அரசு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-05-22 22:45 GMT
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சூறாவளியாக சுழன்று அடித்து வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தனியார் மற்றும் அறக்கட்டளைகள் நிர்வகிக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்காக அதிகளவில் படுக்கைகள் ஒதுக்கும்படி அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கான சிகிச்சை கட்டணத்தை மாநில அரசு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதன்படி தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுகளின் அடிப்படையில் ரூ.4 ஆயிரம், ரூ.7,500, ரூ.9,000 முறையே 3 விதமாக சிகிச்சை கட்டணத்தை வசூலித்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு, மாநகராட்சி கமிஷனர், மாவட்ட கலெக்டரால் கட்டுப்படுத்தப்படும் 80 சதவீத படுக்கை வசதிகளுக்கு இந்த கட்டணம் பொருந்தும். மீதமுள்ள 20 சதவீத படுக்கைகளுக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் தாங்கள் சொந்தமாக நிர்ணயித்த கட்டணங்களை வசூலித்து கொள்ளலாம். ஆனால் சிகிச்சையின் தரத்தில் எந்த வித்தியாசமும் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்