மாதப்பூண்டியில் வாய்க்காலில் ரூ.26 லட்சத்தில் புதிய பாலம்

செஞ்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மாதப்பூண்டி கிராமம். விழுப்புரம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.

Update: 2020-06-04 04:08 GMT
செஞ்சி,

மாதப்பூண்டி கிராமத்துக்கு அருகே செல்லும் வாய்க்காலை கடந்து தான் திருவண்ணமலை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். மாதப்பூண்டி நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் வாய்க்காலின் குறுக்கே மரப்பாலம் அமைத்து கொடுத்து இருந்தனர்.

மேலும் வாய்காலில் பாலம் அமைத்து தர பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தற்போது ஊரக வளர்ச்சித்துறை 2 சிறுபாலங்கள் கட்ட ரூ. 26 லட்சம் நிதி ஒதுக்கியது.

இதை தொடர்ந்து இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அறவாழி முன்னிலை வகித்தார்.

விழுப்புரம் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கோவிந்தசாமி கலந்து கொண்டு கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய பொறியாளர் நாராயணசாமி, ஊராட்சி செயலாளர் தனம் மற்றும் மாதப்பூண்டி நண்பர்கள் நற்பணி மன்றத்தினர், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்