கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆஸ்பத்திரிகள் மீது புகார் அளியுங்கள் - பொதுமக்களுக்கு, மாநகராட்சி வேண்டுகோள்

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க மாநகராட்சி அழைப்பு விடுத்து உள்ளது.

Update: 2020-06-22 23:09 GMT
மும்பை, 

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து மாநில அரசு கொரோனா சிகிச்சைக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து உள்ளது. 

இதில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சாதாரண வார்டுக்கு அதிகபட்சம் ஒரு நாளுக்கு ரூ.4 ஆயிரமும், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க ரூ.7 ஆயிரத்து 500, வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்க நாளுக்கு ரூ.9 ஆயிரம் என நிர்ணயம் செய்து உள்ளது. மேலும் இதை கண்காணிக்க மும்பை மாநகராட்சி தணிக்கையாளர்களை நியமித்து உள்ளது.

மாநகராட்சி அழைப்பு

மாநில அரசும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு 80 சதவீத படுக்கை ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து உள்ளது. எனினும் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட தனியார் ஆஸ்பத்திரி அதிக பணத்தை வசூலித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் குறித்து தயங்காமல் புகார் அளிக்க வேண்டும் என்று பொதுமக்களை மும்பை மாநகராட்சி கேட்டுக்கொண்டு உள்ளது.

மேலும் செய்திகள்