முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

அரியலூர் மாவட்டம், முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட கலெக்டர் ரத்னா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2020-06-28 22:45 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட கலெக்டர் ரத்னா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா?, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா?, பொது மக்கள் முக கவசம் அணிந்து வெளியில் வருகின்றனரா? என அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்த இரு சக்கர, 4 சக்கர வாகன ஓட்டுனர்களுக்கும், கடைக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் தலா ரூ.100 அபராதம் விதித்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தினார். இதில் 24 நபர்களுக்கு தலா ரூ.100 வீதம் ரூ.2,400 அபராதம் விதித்து ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகம் மூலம் வசூலிக்கப்பட்டது. அப்போது ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்