கயத்தாறு அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய டிப்ளமோ என்ஜினீயர் பிணமாக மீட்பு

கயத்தாறு அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய டிப்ளமோ என்ஜினீயர் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2020-06-28 23:56 GMT
கயத்தாறு,

கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் வினோத்குமார் (வயது 23). டிப்ளமோ என்ஜினீயரான இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 26-ந்தேதி கயத்தாறு அருகே குப்பனாபுரத்தில் உள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் நண்பர்களுடன் குளிக்க சென்றார்.

அப்போது வினோத்குமார் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். அவரது உடலை தேடும் பணியில் கழுகுமலை தீயணைப்பு வீரர்கள் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டனர். ஆனாலும் வினோத்குமாரின் உடலை மீட்க முடியவில்லை.

இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து முத்துகுளிக்கும் வீரர்களும் வரவழைக்கப்பட்டு, உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இறந்த வினோத்குமாரின் உடல் நேற்று காலையில் கல்குவாரி தண்ணீரில் மிதந்தது.

அதனை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்