ஒரே நாளில் 67 பேர் பாதிப்பு குமரியில் உச்சம் தொட்டது கொரோனா 43 பேர் டிஸ்சார்ஜ்

குமரியில் உச்சம் தொட்டது கொரோனா. நேற்று ஒரே நாளில் 67 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-03 20:00 GMT
நாகர்கோவில்,

குமரியில் உச்சம் தொட்டது கொரோனா. நேற்று ஒரே நாளில் 67 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும், 43 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

67 பேருக்கு கொரோனா

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேருடன் சேர்த்து மொத்த தொற்றின் எண்ணிக்கை 565 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று குமரியில் உச்சபச்சமாக புதிதாக 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அதன் விவரம் வருமாறு:-

பாதிக்கப்பட்டவர்கள்

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 22 வயது பெண், 52 வயது ஆண், நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெருவைச் சேர்ந்த 21 வயது வாலிபர், இவருடைய 58 வயது தந்தை, வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, கீழ கடியபட்டணத்தைச் சேர்ந்த 42 வயது ஆண், மேலப்பெருவிளையைச் சேர்ந்த 5 மாத குழந்தை, வாணியக்குடியைச் சேர்ந்த 21 வயது பெண், 48 வயது பெண், 41 வயது ஆண், 40 வயது பெண், 48 வயது ஆண், இவருடைய 47 வயது மனைவி, 68 வயது ஆண், கடியபட்டணத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபர், ஞாலம் அந்தரபுரம் பகுதியை சேர்ந்த ஆண், ஈத்தாமொழி அருகில் உள்ள வள்ளியாவிளை பகுதியை சேர்ந்த 34 வயது ஆண், மேலசங்கரன் குழியைச் சேர்ந்த 45 வயது ஆண்,

தெங்கம்புதூர் அருகில் உள்ள பணிக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், திருவிதாங்கோட்டை அடுத்த முத்தலக்குறிச்சி கொட்டாங்குச்சிவிளை பகுதியை சேர்ந்த 20 வயது பெண், அகஸ்தீஸ்வரம் அருகில் உள்ள சி.ஆர்.புதூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த 31 வயது பெண், நாகர்கோவில் மீனாட்சிபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த 40 வயது ஆண், நாகர்கோவில் வடசேரியைச் சேர்ந்த 35 வயது பெண், காப்புக்காடு குறிச்சிவிளையைச் சேர்ந்த 44 வயது ஆண், புதுக்கடையைச் சேர்ந்த 57 வயது ஆண், தூத்தூரைச் சேர்ந்த 25 வயது பெண், இவருடைய 57 வயது தாயார், 23 வயது ஆண், 22 வயது ஆண் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். நள்ளிரவில் வெளியான பரிசோதனை முடிவில் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் தெரியவில்லை.

43 பேர் டிஸ்சார்ஜ்

தூத்தூரைத் தொடர்ந்து வாணியக்குடி பகுதியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று பாதிக்கப்பட்ட 67 பேருடன் சேர்த்து குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் நேற்று ஒரே நாளில் 43 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்