கொரோனா தடுப்பு நடவடிக்கை: பனிமயமாதா ஆலய விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் - ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, தூத்துக்குடி பனிமயமாதா ஆலய விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்று ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2020-07-24 22:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், பொதுமக்கள் விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அனைத்து பங்கு மக்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் நேற்று மாலை நடந்தது.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் முன்னிலை வகித்தார். திரேஸ்புரம் உதவி பங்குத்தந்தை அந்தோணிசாமி கலந்து கொண்டு ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களிடையே பேசினார்.

அப்போது அவர், கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் ஆலய விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்