கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆட்டோ-கால் டாக்சிகளில் ஒட்டப்படும் பாதுகாப்பு ‘ஷீட்’

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆட்டோ-கால் டாக்சிகளில் ஒட்டப்படும் பாதுகாப்பு ‘ஷீட்’ பயமின்றி பொதுமக்கள் பயணிக்கலாம்.

Update: 2020-08-07 00:53 GMT
சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் பஸ், ரெயில் போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. என்னதான் கால் டாக்சிளும், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கினாலும் அதில் பயணம் மேற்கொள்ள பொது மக்களிடையே ஒருவித தயக்கம் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கால்-டாக்சி மற்றும் ஆட்டோக்களில் ‘கோவிட் ஷீட்’ எனும் பாதுகாப்பு ‘ஷீட்’கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதாவது டிரைவருக்கும், பயணிகளுக்கும் இடையே கண்ணாடி இழை போன்ற மெல்லிய ‘ஷீட்’கள் ஒட்டப்படுகின்றன.

இந்த பாதுகாப்பு ‘ஷீட்’ ஒட்டப்படுவதால் பயணத்தின்போது டிரைவர் ஒருவேளை இருமினாலோ, தும்மினாலோ அது எந்த வகையிலும் பயணிக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. இதனால் கொரோனா பயம் இல்லாமல் பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும். இந்த பாதுகாப்பு ‘ஷீட்’ ஒட்டும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “தற்போது எங்கு பார்த்தாலும் கொரோனா பீதி நிலவுகிறது. இந்த சூழலில் போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படும் ஆட்டோ மற்றும் கால்-டாக்சிகளில் கொரோனா ‘ஷீட்’ ஒட்டப்படும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அனைத்து வாகனங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டால் நன்றாக இருக்கும்” என்றனர்.

மேலும் செய்திகள்