ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 30 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-07 05:54 GMT
சிவகங்கை,

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,483 ஆக இருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 503 ஆக உயர்ந்துள்ளது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 54 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 71 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 33 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் செய்திகள்