கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2020-08-13 01:20 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், மகேஷ்குமார், நகர தலைவர் சண்முகராஜ் மற்றும் காங்கிரசார், விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், கடந்த 2018-2019-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு உடனே இழப்பீட்டுத்தொகையை வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பயிர் காப்பீடு நிலுவைத்தொகை கிடைக்கப் பெறாமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

மேலும் கடந்த 2019-2020-ம் ஆண்டு மழை வெள்ளத்தில் சேதம் அடைந்த பயிர்களுக்கும் உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பொதுப்பாதைஆக்கிரமிப்பை அகற்ற...

இதேபோன்று மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் கனகராஜ், பொருளாளர் கேசவன் உள்ளிட்டவர்கள், கோவில்பட்டி உதவி கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அதில், கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்து தாமஸ் நகரில் பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்