மும்பையில் புதிதாக 1,132 பேருக்கு கொரோனா மேலும் 46 பேர் உயிரிழந்தனர்

மும்பையில் நேற்று புதிதாக 1,132 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் 46 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-08-19 22:57 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொடக்கத்தில் நிதி தலைநகர் மும்பையில் தான் அசுர வேகத்தில் பரவியது.

ஆனால் ஆறுதல் அளிக்கும் விதமாக இடையில் கொரோனா பரவும் வேகம் குறைந்தது. இருப்பினும் சமீப நாட்களாக மீண்டும் மும்பையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மும்பையில் நேற்று புதிதாக 1,132 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் காரணமாக இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் நேற்று நோய் தாக்கத்தின் காரணமாக 46 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று மருத்துவமனையில் இருந்து குணமாகி வெளியேறிய 864 பேரையும் சேர்ந்து இதுவரை நிதி தலைநகர் மும்பையில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 57 பேர் குணமடைந்துள்ளனர். மும்பையில் தொற்றில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 80 ஆக உள்ளது.

தற்போது குணமடைந்தவர்கள், இறந்தவர்கள் போக 17 ஆயிரத்து 917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் இரட்டிப்பாகும் காலம் மும்பையில் 89 நாட்களாக உள்ளது.

மேலும் செய்திகள்