தானேயில், 17 தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளிடம் ரூ.1.82 கோடி அதிக கட்டணம் வசூலித்தது அம்பலம்

தானேயில் 17 தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளிடம் ரூ.1 கோடியே 82 லட்சம் அதிக கட்டணம் வசூலித்தது அம்பலமாகி உள்ளது.

Update: 2020-08-24 23:57 GMT
மும்பை, 

தானேயில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த மாநகராட்சி கமிஷனர் தணிக்கை குழுவை அமைத்தார். இந்த தணிக்கை குழுவினர் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த 17 தனியார் ஆஸ்பத்திரிகளில் சோதனை நடத்தினர்.

அவர்கள் ஆஸ்பத்திரிகளின் 4 ஆயிரத்து 106 கட்டண ரசீதுகளை தணிக்கை செய்தனர். அப்போது அந்த தனியார் ஆஸ்பத்திரிகள் நோயாளிகளிடம் ரூ.1 கோடியே 82 லட்சம் அளவுக்கு அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்தது.

நோட்டீஸ்

இதையடுத்து மாநகராட்சி அந்த ஆஸ்பத்திரிகளுக்கு நோட்டீஸ் அளித்து உள்ளது. அதிக கட்டணம் வசூலித்ததில் ரூ.26 லட்சத்து 68 ஆயிரத்தை மட்டும் ஆஸ்பத்திரிகள் திருப்பிவழங்கி உள்ளன. ரூ.15½ லட்சத்துக்கு ஆஸ்பத்திரிகள் வழங்கிய விளக்கத்தை மாநகராட்சி ஏற்றுக்கொண்டு உள்ளது.

இன்னும் தனியார் ஆஸ்பத்திரிகள் ரூ.1 கோடியே 40 லட்சத்தை திருப்பி வழங்க வேண்டி உள்ளதாக மாநகராட்சி கூறியுள்ளது.

மேலும் செய்திகள்