வசந்தகுமார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

நெல்லை மாவட்டத்தில் வசந்தகுமார் உருவப் படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2020-08-29 23:15 GMT
நெல்லை,

தமிழக காங்கிரஸ் செயல் தலைவரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையொட்டி நெல்லை நாடார் உறவின்முறை சங்க அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாடார் உறவின்முறை சங்க தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன், துணை தலைவர் பொன்னுசாமி, செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் ராமச்சந்திரன், இணை செயலாளர் பாக்கியராஜ், பொருளாளர் இசக்கிமுத்து, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மனோகர், ராமலிங்கம், ஜோசப் ராஜ், பாஸ்கர், அந்தோணி ஜெயபாண்டி, சோமசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எச்.வசந்தகுமார் எம்.பி. யின் மறைவையொட்டி, இட்டமொழியில் வியாபாரிகள் அனைத்து கடைகளையும் அடைத்தனர். இட்டமொழி பஸ் நிறுத்தம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட எச்.வசந்தகுமாரின் உருவப்படத்துக்கு நாங்குநேரி வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர் மங்களராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் லிங்கபாண்டி, கிருபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரப்பாடியில் அலங்கரிக்கப்பட்ட எச்.வசந்தகுமாரின் உருவப்படத்துக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் டபிள்யு.ராஜாசிங், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பத்மசிங் செல்வமீரான், இளைஞர் காங்கிரஸ் ஜேக்கப் பாண்டி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மூலைக்கரைப்பட்டியில் அலங்கரிக்கப்பட்ட எச்.வசந்தகுமாரின் உருவப்படத்துக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் லெனின் பாரதி, வட்டார துணை தலைவர் கே.எம்.சாமி, முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் துரை அரசு மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சங்கரன்கோவிலில் எச்.வசந்தகுமாரின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் நிர்வாகி சித்திரைகண்ணு தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குருவிகுளம் வட்டார செயலாளர் அழகை கண்ணன், நகர துணை தலைவர் பீர் முகம்மது, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நசரூதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்