பரங்கிமலை சுரங்கப்பாதை மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி

மழைகாலம் நெருங்குவதால் ஆங்காங்கே மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2020-08-30 01:24 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூரில் இருந்து ஆதம்பாக்கம் வழியாக செல்லும் பரங்கிமலை ரெயில்வே சுரங்கப்பாதையை வானுவம்பேட்டை, நங்கநல்லூர், உள்ளகரம், மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் போன்ற பகுதிகளுக்கு செல்வோர் பயன்படுத்தி வந்தனர். மழைகாலம் நெருங்குவதால் ஆங்காங்கே மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆலந்தூர் ராஜா தெரு, எம்.கே.என்.சாலை, ஸ்டேஷன் சாலை போன்ற பகுதியில் உள்ள மழைநீர் சுரங்கப்பாதையில் நுழைவதால் சுரங்கப்பாதை நிரம்பி வழிகிறது. இதனை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரங்கிமலை சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் அருகே அகல கால்வாய் அமைத்து நீரை வெளியேற்றுவதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

ஆனால் முன்னறிவிப்பு இன்றி திடீரென இந்த பணி தொடங்கியதால் சுரங்கப்பாதை மூடப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். பழவந்தாங்கல் சுரங்கப்பாதையிலும் சீரமைப்பு பணி நடந்து வருவதால் வாகன ஒட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்